மாட்டுப்பொங்கலையொட்டி உழவர் சந்தைகளில்ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மாட்டுப்பொங்கலையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

Update: 2023-01-16 19:48 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருவிழாக்கள் மற்றும் அமாவாசை தினம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்தை விட காய்கறிகள் அதிகம் விற்பனை ஆகும். அதன்படி மாட்டு பொங்கலையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் நேற்று ஒரு நாள் மட்டும் 256 டன் காய்கறிகள், ரூ.1 கோடியே 1 லட்சத்து 84 ஆயிரத்து 877-க்கு விற்பனை ஆகின. இதனை ஏராளமான நுகர்வோர்கள் வாங்கிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்