கோவையில் மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை - கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
கோவையில் மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவையில் மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ரத்தினபுரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, டாடாபாத் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை மாணவர்களுக்கு ஊசி மூலம் உடலில் ஏற்றி, அதிக பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 17 வயதான மாணவர், கல்லூரி மாணவர்களான விவேக் பாரதி, தனபாலன், மாத்திரைகளை கொடுத்து வந்த சிங்காநல்லூரில் மருந்துக் கடை நடத்தி வரும் கரிகாலன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஆயிரத்து 512 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், 17 வயதான மாணவர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற 3 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.