கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்குமாறுபொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்களது ஊர்களில் யாரேனும் கள்ளச்சாராயம், போலியான மற்றும் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை 9042469405 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மதுவிலக்கு அமல்பிரிவு சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.