கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு

கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-12-15 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின்பேரில் நின்ற வெற்றிச்செல்வன் (வயது 19) மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்