அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி

Update: 2023-02-10 16:23 GMT

போடிப்பட்டி,

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழ்நிலையையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை தொடர்வதற்கு ஏற்ப கராத்தே தற்காப்பு கலைப் பயிற்சியானது சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கராத்தே பொறுப்பாசிரியை புவனேஸ்வரி மேற்பார்வையில் கராத்தே பயிற்றுனர் சந்தோஷ் குமார் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியை மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், அருள்முருகன் ஆகியோர் பார்வையிட்டு பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த தற்காப்புக்கலை பயிற்சியின் மூலம் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், பயமின்றி நடமாடவும், உடல், மன எழுச்சி, ஆரோக்கியம் போன்ற நன்மைகள் மாணவிகளுக்கு கிடைக்கின்றன.பயிற்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், வட்டார வளமைய பயிற்றுனர் பிரபாகரன், ஆசிரியர் சண்முகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்