கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு
கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு 29-ந்தேதி நடக்கிறது
கடலூர்
கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந்தேதி(சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த அணி தேர்வில் வரும் மாணவ- மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.