மூத்தோர் தடகள அணி வீரர்கள் தேர்வு
திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 40-வது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள அணி சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு போட்டி இன்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
போட்டிகளை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் 30 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.
இவர்களில் 52 பேர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.