தஞ்சை மாவட்ட கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு

மாநில போட்டியில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 16-ந்தேதி நடக்கிறது

Update: 2023-04-10 18:45 GMT


தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

70-வது தமிழ்நாடு சீனியர் ஆண்கள், பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் காலை 9 மணிக்கு அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் முன்னிலையில் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறுகிறது. எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. ஆண்கள் 85 கிலோவிற்கு கீழ் இருக்க வேண்டும். பெண்கள் 75 கிலோவிற்கு கீழ் இருக்க வேண்டும். வீரர்கள் அனைவரும் சீருடையில் வர வேண்டும். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்