நாகர்கோவிலில் தொழிற் பழகுனருக்கான தேர்வு முகாம்;52 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது
நாகர்கோவிலில் தொழிற் பழகுனருக்கான தேர்வு முகாமில் 52 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தொழிற் பழகுனருக்கான தேர்வு முகாமில் 52 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது
பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் இயக்குனரகம் இணைந்து குமரி மாவட்ட அளவில் நடத்தும் பிரதம மந்திரியின் தொழில்பழகுனர் தேர்வு முகாம் நேற்று காலை முதல் மாலை வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நடைபெற்றது.
இந்த முகாமில் தொழிற்பழகுனர்களை தேர்வு செய்ய 13 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 496 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 52 பேருக்கு தொழிற்பழகுனர் நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரீபா, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை உதவி இயக்குனர் லெட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.