கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாம்
கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாம் நடந்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு முகாம் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. சிறந்த பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சர்வதேச அளவில் பயிற்சி அளிப்பதற்காக இந்த முகாம் நடந்தது. முதல் நாள் சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வும், நேற்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வும் நடந்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தேர்வு முகாம்கள் நடைபெற்றன. திருச்சியில் நேற்று நடந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சையை சேர்ந்த 14 முதல் 24 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 847 பேர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டு, திறமையின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தனர். முகாமின் முடிவில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.