புஷ்பகிரி குழந்தை தெரசால் ஆலய தேர்த்திருவிழா
கந்திகுப்பம் அருகே புஷ்பகிரி குழந்தை தெரசால் ஆலய தேர்த்திருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே புஷ்பகிரி கிராமத்தில் உள்ள குழந்தை தெரசால் ஆலயத்தின் 8-ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஜெபமாலை, வேண்டுதல் தேர்பவனியுடன் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசால் தேர்பவனி நடைபெற்றது. இதனை, சுண்டம்பட்டி பங்குத்தந்தை ஜார்ஜ் மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர்பவனியில் புஷ்பகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுபேதார் மேடு மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.