கூழாங்கற்கள் கடத்திய லாரிகள் பறிமுதல்; 2 டிரைவர்கள் கைது
கூழாங்கற்கள் கடத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூழாங்கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாச்சலம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தனர். இதில் அந்த லாரிகளில் கூழாங்கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஆண்டிமடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து லாரிகளின் டிரைவர்கள் விழுப்புரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (30) மற்றும் விருத்தாசலம் அருகே நெடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.