கிராவல் மண் கடத்திய லாரிகள் பறிமுதல்; 2 டிரைவர்கள் கைது

கிராவல் மண் கடத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-10 19:36 GMT

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் ஆயிப்பட்டி குளத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராவல் மண் அள்ளிய 2 டிப்பர் லாரிகளை பிடித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கீழத்தெருவை சேர்ந்த செல்வகுமார்(வயது 39), ஆலங்காடு தொண்டைமான் குடியிருப்பை சேர்ந்த முருகேசன்(23) ஆகியோர் டிப்பர் லாரிகளில் தலா 3 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து லாரிகளுடன் 2 பேரையும் ஆலங்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்