அனுமதியின்றி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-03 19:00 GMT

தட்டார்மடம்,:

சாத்தான்குளம் பகுதியில் மணல் மற்றும் கற்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில் திருச்சி மண்டலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பொறியாளர் ஜெகசீசன் தலைமையில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் சாத்தான்குளம் நீதிமன்றம் அருகில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் அனுமதி பெறாமல் 9 யூனிட் அளவுடைய சாதாரண கற்கள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் லாாி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்