மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்; உரிமையாளர் கைது

விராலிமலை அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-30 18:32 GMT

விராலிமலை அருகே குளவாய்ப்பட்டி, ஆத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோரையாற்றில் இரவு நேரங்களில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக விராலிமலை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியபோது டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். பின்னர் போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளரான துலுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பால்சாமி (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்த இலுப்பூர் தாலுகா தென்னலூர் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற புருசோத்தமனை தேடி வருகின்றனர். ஏற்கனவே பால்சாமி மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்