கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-07-28 18:26 GMT

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோரமடை பகுதியில் வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்