பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சங்கராபுரம் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் உரிமையாளர்கள் 3 பேருக்கு அபராதம்

Update: 2022-06-24 17:37 GMT

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் பேரில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சம்பத்குமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், பாலமுருகன், குணதீபன், ராமச்சந்திரன் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் புகை பிடித்த 3 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். மேலும், கடைவீதி, கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தபோது 3 கடைகளில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து எச்சரித்ததோடு அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்