குறிஞ்சிப்பாடியில்காரில் கடத்தி வந்த 56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்6 பேர் கைது
குறிஞ்சிப்பாடியில் காரில் கடத்தி வரப்பட்ட 56 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி,
வாகன சோதனை
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், காருக்குள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 56 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த 6 பேரிடம் நடத்தினர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
விசாரணையில், அவர்கள், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. நகரை சேர்ந்த மதியழகன் வயது (வயது 58), வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவலிங்கம் மகன் தமிழ்ச்செல்வன் (27), குறிஞ்சிப்பாடி பெரியார் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (38), வடலூர் ஆபத்தாரணபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜேஷ் (28), குறிஞ்சிப்பாடி நந்தவன தெருவை சேர்ந்த ராமர் மகன் பாலாஜி (32), சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்த பிரதாப் (21) ஆகியோர் என்பதும், காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.