புகையிலை பொருட்கள் பறிமுதல்

கொடைக்கானலில், கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-14 17:11 GMT

கொடைக்கானல் நகரில் உள்ள கடைகளில், த‌மிழ‌க‌ அர‌சால் த‌டை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உண‌வு பாதுகாப்புதுறை அலுவ‌ல‌ர் லார‌ன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் கொடைக்கானல் அண்ணாசாலை, ஏரிச்சாலை, பெண்ட‌ர்லாக் ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அண்ணாசாலை ப‌குதியில் உள்ள‌ ஒரு க‌டையில் 3½ கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நகரில் உள்ள பல்வேறு சாக்லேட் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். உண‌வுப்பொருட்க‌ளுட‌ன், வ‌லி நிவாரண ஆயில்க‌ளையும் விற்பனை செய்யக்கூடாது. சாக்லேட், பிஸ்க‌ட் உள்ளிட்ட‌ பொருட்க‌ளில் த‌யாரிப்பு ம‌ற்றும் காலாவ‌தி தேதி குறிப்பிட வேண்டும். மேலும் அதில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌க்கூடிய‌ மூல‌ப்பொருட்க‌ளையும் தெரிவிக்க வேண்டும். மேலும் வ‌லி நிவார‌ண ஆயில்க‌ளில், இது உட்கொள்ள‌க்கூடிய‌ பொருள் இல்லை என்று குறிப்பிட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்