புகையிலை பொருட்கள் பறிமுதல்
பாபநாசம் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் மீது வழக்குப்பதிவு
பாபநாசம்:
பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீசார் பாபநாசம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரது பெட்டிக் கடையிலும், பாபநாசம் தெற்கு ராஜவீதியில் சுகுமார் என்பவரது பெட்டிக்கடையிலும் தடை செய்யப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 2 பேர் மீதும் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.