கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-18 18:12 GMT

இலுப்பூர் அருகே உள்ள எருதுப்பட்டி பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து இலுப்பூர் போலீசார் எருதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஆரியக்கோண்பட்டியை சேர்ந்த பழனியாண்டி (வயது 38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்