மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-17 19:08 GMT

ஆலங்குடி அருகே கிடாரம்பட்டி அக்னி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாக செம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய மணவிடுதியை சேர்ந்த பிரபாகரன், செல்வன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்