முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
குடியாத்தம் அருகே முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீசார் இன்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி மலைஅடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்தி வரப்பட்ட முரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.