மண் கடத்திய லாரி பறிமுதல் 2 பேர் மீது வழக்கு

மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Update: 2023-08-19 21:48 GMT

அந்தியூர்

ஆப்பக்கூடல் அருகே புன்னம் பிரிவு பகுதியில் ஆப்பக்கூடல் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது லாரியில் கிராவல் மண் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் தோப்பூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும், லாரியில் மண் கடத்தியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியை போலீசார் பறிமுதல் செய்ததுடன் டிரைவர் ரவிச்சந்திரன் மற்றும் லாரியின் உரிமையாளரான கம்பநாயக்கனூரை சேர்ந்த ஜெயபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்