மண்டபம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல்படை அதிரடியாக சோதனை நடத்தி பறிமுதல் செய்தது.

Update: 2022-10-27 17:39 GMT

பனைக்குளம், 

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல்படை அதிரடியாக சோதனை நடத்தி பறிமுதல் செய்தது.

அதிரடி சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் ஒன்றில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுந்தரமுடையான் அருகே உள்ள பிள்ளைமடம் கடல் பகுதியில் மாங்குரோவ் காடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சாக்கு மூடைகளை பிரித்து சோதனை செய்தனர்.

சாக்கு மூடைகளை பிரித்து சோதனை செய்து பார்த்ததில் அதில் இருந்த சுமார் 400 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரகாவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ.1½ கோடி மதிப்பு

இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த இந்த கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடி ஆகும். மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து இந்திய கடலோர படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்