கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது
பாபநாசம்
பாபநாசம் பேரூராட்சி(பொறுப்பு) செயல் அலுவலர் குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பாபநாசம் பகுதியில் உள்ள 6 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது.