அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2023-04-07 18:45 GMT

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி முன்பு மாவட்ட கனிமவளத்துறை அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 3 யூனிட் மணல் இருந்ததும், அந்த மணல் அனுமதி இன்றி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கனிமவளத்துறை மாவட்ட அலுவலர் சேகர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் தப்பி ஓடிய சீர்காழி தாலுகா கீழகொண்டத்தூர் வெள்ளாளத்தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் இளந்தமிழ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்