மணல் கடத்திய லாரி பறிமுதல்; ஒன்றியக்குழு துணை தலைவர்-கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய லாரி பறிமுதல்; ஒன்றியக்குழு துணை தலைவர்-கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 19:14 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராம நிர்வாக அலுவலர் புண்ணியமூர்த்திக்கு, நேற்று அதிகாலை சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழப்பழுவூர் போலீசாருடன் அவர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சாத்தமங்கலம் சாலை வழியாக வண்ணம்புத்தூர் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக 2 யூனிட் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து லாரியின் உரிமையாளர்களான ராஜேந்திரன், திருமானூர் ஒன்றியக்குழு துணை தலைவரான அம்பிகா ராஜேந்திரன், லாரி டிரைவர் திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரையின் மகன் சதீஷ்குமார்(வயது 33) ஆகிய 3 பேர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சதீஷ்குமாரை (33) கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்