கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரத்தில் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-24 16:46 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில்  விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் ஜானகிபுரம் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜானகிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு கொட்டகையில் 50 கிலோ எடை கொண்ட 40 சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், இந்த ரேஷன் அரிசியை விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 56) என்பவர் பதுக்கி வைத்திருந்ததும், இவர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை அரவை மில்லில் கொடுத்து அரைத்து திண்டிவனம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கும் மற்றும் மாட்டுத்தீவனத்திற்கு பயன்படுத்துவதற்கும் கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு அதனை பதுக்கி வைத்த லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்