கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் ைகது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-24 17:45 GMT

நாகர்கோவில்:

மார்த்தாண்டத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் ைகது செய்யப்பட்டனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

கேரளாவுக்கு கடத்தல்

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சோதனை நடத்தி கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1½ டன் ரேஷன் அரிசி

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் காரில் 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது ெதரிய வந்தது.

இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கார் டிரைவர் மூளகுமூடு ஒட்டபிழவிளையை சேர்ந்த ஆனந்த் (வயது 24) மற்றும் கண்ணக்கோட்டை சேர்ந்த அருண்ஜோ (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்