பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல் -பிடிபட்டவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-10 11:50 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளத்துப்பாக்கி

நீலகிரி மாவட்டம் தேவாலா உட்கோட்டம் பந்தலூர் அருகே சப்பந்தோடு பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கள்ள துப்பாக்கி இருப்பதாக பந்தலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் சப்பந்தோடு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சோமன் என்பவரின் வீட்டில் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வீடடில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் மற்றும் துப்பாக்கிகளை பழுது நீக்கும் கருவிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணை

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சோமனை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷிஷ் ராவத் உத்தரவின்படி, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கள்ளத்துப்பாக்கி சோமனுக்கு எப்படி கிடைத்தது. மேலும் தொழிற்சாலைகள் அமைத்து கள்ளத்துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்