தர்மபுரியில் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Update: 2023-04-05 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி டவுன் போலீசார் ராமாக்காள் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் 5 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் மூலம் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் யாருடையது?, அங்கே நிறுத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்