மத்தூர்:
கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை சாலையில் கண்ணண்டஅள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னுசாமி மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் கிரானைட் கல்லை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.