ஓசூர்:
ஓசூர் அருகே காரப்பள்ளி பகுதியில் ஒன்னல்வாடி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் ஒரு யூனிட் கற்கள் இருந்தது, தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, லாரியில் கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதில் கற்களை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.