புகையிலை பொருட்கள் பறிமுதல்
உலகம்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டி கடைவீதி பகுதிகளில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது, படமிஞ்சி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகன் கணேசன் (வயது 32). உலகம் பட்டியில் உள்ள கடையில் புகையிலை வைத்து விற்பனை செய்ததை தொடர்ந்து கடையில் இருந்து 1 கிலோ 390 கிராம் புகையிலைகள் மற்றும் 37 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் உலகம்பட்டியைச் சேர்ந்த சடையாண்டி மகன் ராஜேந்திரன் (32) என்பவரது கடையில் வைத்து இருந்த 5 கிலோ 10 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கணேசன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் உலகம்பட்டி போலீசார் கைது செய்தனர்.