கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 5 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தளி
கேரளாவுக்கு கனிமளங்களை கடத்தி சென்றதாக 6 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லாரிகள் பறிமுதல்
உடுமலை பகுதில் இருந்து கேரளாவிற்கு 5 டிப்பர் லாரிகளில் பல லட்சம் மதிப்பிலான ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மண் கடத்தப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அங்கு 5 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து உடுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல்வேறு வகையான உயிரினங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு கனிமவளங்களின் பங்கு முக்கியமானதாகும். அவை மிகுந்த உள்ள இடத்தில் சுற்றுப்புறச் சூழலும் சீராக இருப்பதுடன் மழைப்பொழிவும் தடையின்றி கிடைத்து வரும். இதனால் பல்லுயிர்களின் இனப்பெருக்கமும் சீராக இருக்கும் இயற்கையும் காப்பாற்றப்படும். ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு லாரி லாரியாக உடுமலை-மூணார் சாலை வழியாக கிராவல், வண்டல் மண், ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட்மண் கடத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
கடத்தலை தடுத்து வனப்பகுதியை பாதுகாப்பதற்காக ஒன்பதாறு மற்றும் சின்னாறில் அமைக்கப்பட்ட போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கடத்தல் நடப்பது தெரியவந்தால் உடனே அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இதே போன்று தொடர் நடவடிக்கை எடுத்து கனிமவளங்கள் கொண்டு செல்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் இயற்கையும் அதைச் சார்ந்த உயிரினங்களும் காப்பாற்றப்படுவதுடன் எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரமும் மேன்மை அடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.