அரசு மாதிரி பள்ளியில் அறிவியல் சோதனை பயிற்சி
அரசு மாதிரி பள்ளியில் அறிவியல் சோதனை பயிற்சி
குண்டடம்
குண்டடம் ஒன்றியம் சேடபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேடபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தலைமை தாங்கினார். இதில் சி.எஸ்.ஐ.ஆர்.
நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அசோக் குமார், சரவணன், பிரவீன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் எளிய அறிவியல் பரிசோதனைகளையும் செய்து காட்டினர். இப்பயிற்சியில் குண்டடம் ஒன்றியத்தைச் சேர்ந்த பொறுப்பு மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சேடபாளையம் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் அறிவியல், கணித ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.