காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை

பரப்பாடியில் காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2022-10-27 21:46 GMT

இட்டமொழி:

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது நாங்குநேரி தாலுகா பரப்பாடிக்கு வருகை தந்த சீமானை பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக நிர்வாகிகள் நெல்லை ஜெயசீலன், மெகுலன், ராசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருச்சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ராம்பாலையா, முருகப்பெருமாள், ஸ்டாலின் பிரபு, ஜேக்கப் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளையில் நேற்று மாலை ராதாபுரம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது கூட்டத்தில் அவர் பேசும்போது, இது லட்சியத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி. கடந்த சட்டமன்ற தேர்தலில் எல்லா வாக்குசாவடிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம், என்றார்.

முன்னதாக மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சுதந்திர போராட்ட வீரர் மருதுபாண்டியர் படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்