மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம்

Update: 2022-09-19 21:23 GMT

நாகர்கோவில்:

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி, துணை ஒருங்கிணைப்பாளர் தமயந்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், துணை தலைவர் இந்திரா உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு காலத்திற்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒரே சீரான பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவுகளுக்கு ஒரு மாத கால ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். போக்குவரத்துப்படி மற்றும் உணவுப்படி வழங்க வேண்டும். ஊழியர்களின் மகப்பேறு கால சலுகைகளை வழங்க வேண்டும். மலைப் பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்புப்படி வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களை விடுப்பாகக் கருத வேண்டும். சுகாதார மைய அலுவலகங்களில் உபகரணங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான இடமும், ஆன்லைன் பதிவு உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு அமரும் இடமும் ஒதுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்