விதை விற்பனையாளர்கள் தரம் அறிந்து விற்பது அவசியம் - அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் விதை பரிசோதனை அதிகாரி ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதைகளை வினியோகம் செய்யும் போது அதன் தரத்தை அறிந்து விற்பனை செய்வது மிகவும் அவசியமாகும். விதை வினியோகம் விதை சட்டம் 1986 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பகுப்பாய்வு முடிவுகள் கை வசம் வைத்திருப்பது நன்மை பயக்கும். நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுக்கும். எனவே, விற்பனை செய்யப்படும் அனைத்து விதை குவியலுக்கும் மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பி ரூ.80-ஐ கட்டணமாக செலுத்தி பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.