சேலம், கிருஷ்ணகிரியில் சிறுமி உள்பட 3 பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த வாலிபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 வயது சிறுமி கர்ப்பம்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும், 24 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கர்ப்பமாக்கியது நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வா (வயது 24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விஸ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் விஸ்வா ஏற்கனவே 2 பெண்களை மயக்கி திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
காதல் திருமணம்
நாகர்கோவிலை சேர்ந்த விஸ்வா ஆரம்பத்தில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் அவர் அந்த வேலையை விட்டு விட்டு கடந்த 2022-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. விஸ்வா அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருமணமான 7 மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர்.
திருமணமான பெண்ணுடன் பழக்கம்
இதையடுத்து விஸ்வா கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழ ஜூஸ் கடையில் வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து விஸ்வா, அந்த பெண்ணை தனது வலையில் சிக்க வைத்து அடிக்கடி சந்தித்து பேசினார். அப்போது அவருடைய ஆசைவார்த்தையில் இளம்பெண் மயங்கியதால் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து 2-வதாக விஸ்வா அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகளுடன் சேலம் அம்மாபேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.
இந்த நிலையில் விஸ்வாவின் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் வந்து சென்றார். இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கர்ப்பமாக்கினார்
இதற்கிடையே விஷ்வாவின் குடும்பத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் நெருங்கி பழக தொடங்கினர். இந்த நிலையில் 40 வயது பெண் விஸ்வாவிடம் நாம் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தால் வாடகை பணம் மிச்சம் ஆகும் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நேரத்தில் விஸ்வாவின் பார்வை 16 வயது சிறுமியின் பக்கம் திரும்பியது. இந்த சிறுமியை மயக்கி தனது காதல் வலையில் சிக்க வைக்க முடிவெடுத்தார்.