என்.எல்.சி.யில்பாதுகாப்பு படை வீரர்களின் ஆயுதக்கிடங்கு பணியாளர் திடீர் சாவுபோலீஸ் விசாரணை

என்.எல்.சி.யில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் ஆயுதக்கிடங்களில் பணிபுரிந்தவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-09-20 18:45 GMT


நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பராமரிப்பு செய்யும் வகையில், நெய்வேலியில் சி.ஐ.எஸ்.எப். யூனிட்டில் ஆயுதக்கிடங்கு அமைந்துள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பங்கணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பீரவள்ளு மகன் ராமுகு(வயது 45) என்பவர் பணிபுரிந்து, வீரர்களின் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

சாவு

நேற்று முன்தினம் ராமுகு வழக்கம் போல் 2-ம் கட்ட பணிக்கு சென்றார். பணி முடிந்த பின்னர், அந்த பகுதியில் தான் தங்கி இருக்கும் அறையில் ராமுகு தூங்கினார். நேற்று காலை 7 மணியை கடந்தும், அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, அவருடன் தங்கியிருந்த சக பணியாளர்கள், அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால், ராமுகு எழுந்திரிக்கவில்லை.

இதையடுத்து அவரை நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராமுகு இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்