ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு செயலர் ஆய்வு

ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு செயலர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-01-06 18:45 GMT

ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு செயலர் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு செயலர் ஆய்வு

மத்திய அரசின் முன்னேறி வரும் மாவட்ட பட்டியலில் உள்ளராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அரசு சிறப்பு செயலர் ஹர்சகாய் மீனா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது அரசு சிறப்பு செயலர் ஹர்சகாய் மீனா கூறியதாவது:- பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீரின் தரத்தை தினமும் பரிசோதனை செய்து வினியோகிக்கவேண்டும். கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.

விழிப்புணர்வு

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டிகளை தூய்மையாக வைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி சப் கலெக்டர் அப்தாப் ரசூல், பயிற்சி சப் கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்