கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் பழுது - சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்...!
மாமல்லபுரம் அருகே உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் பழுது ஏற்பட்டதால் சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் நேற்று இரவு நீர்சுழற்சி பகுதியில் திடீர் பழுது ஏற்பட்டதால் அங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பகுதி-9, 13, 14 மற்றும் 15 உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இப்பணிகள் காரனமாக நாளை காலை 10 மணி வரை சென்னைக்கு அனுப்பி வந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மாமல்லபுரத்தில் நடைபெறும் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்கும் இங்கிருந்து தான் குடிநீர் அனுப்ப குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.