சீமான் உருவ பொம்மை எரிப்பு; 15 பேர் கைது

தென்காசியில் சீமான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-22 18:45 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பேசும்போது அருந்ததியர் சமூகத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழ் புலிகள் அமைப்பினர் சீமானை கண்டித்து கோஷமிட்டு கொண்டு அங்கு வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அதே கட்சியினர் மற்றொரு பிரிவாக பின்புறம் வந்து சீமானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். பின்னர் அதன் மீது துடைப்பம், செருப்பு போன்றவற்றால் அடித்தனர். உடனே போலீசார் அதில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் 15 பேரை கைது செய்தனர். போராட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் குமார், ஆதித்தமிழர் பேரவை முருகன், அசோக் பாண்டியன், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் சந்திரசேகர், சரத் வள்ளுவன், மாரியப்பன், தமிழ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் பஸ்நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்