10 அடிகளுக்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பனை செய்த இடத்திற்கு சீல்
காட்பாடியில் 10 அடிகளுக்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பனை செய்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
காட்பாடி கல்புதூர் மற்றும் மெட்டுக்குளம் கிராமத்தில் அனுமதி இன்றி 10 அடிக்குமேல் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு நேற்று புகார் சென்றது. அதன் பேரில் அவரும், வருவாய்த்துறை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், கல்புதூர் துரை பாலாஜிநகர் பகுதியில் 10 அடிக்கு மேல் 9 விநாயகர் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.