அனுமதியின்றி இயங்கிய 3 சாயப்பட்டறைகளுக்கு சீல்வைப்பு

Update: 2023-06-20 19:08 GMT

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியில் 3 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி இல்லாமல் இயங்கிய சாயப்பட்டறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனே மாசு கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் ஜனார்த்தனன், காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் மேகலா, தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதி இல்லாமல் செயல்பட்ட 3 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்