54 கடைகளை பூட்டி 'சீல்' வைப்பு

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறினார்.

Update: 2023-08-25 13:28 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறினார்.

புகையிலை பொருட்கள் விற்பனை

உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கடந்த 2 மாதங்களாக புகையிலை பொருட்கள் விற்பனை, மொத்த விற்பனை, கடத்தல் நபர்கள் ஆகியோர் குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 99 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து 384 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.52 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் 54 கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

54 கடைகளுக்கு 'சீல்'

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களில் மட்டும் 54 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் 4 கடைகளில் தொடர்ச்சியாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு 2 முறை எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை உணவுபாதுகாப்புத்துறை ஆணையாளருக்கு பரிந்துரைக்கடிதம் அனுப்பப்பட்டு அவர் உத்தரவின் பேரில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் சென்னை சென்று ஆணையாளரிடம் அனுமதி பெற வேண்டும். அது அவ்வளவு எளிதானது கிடையாது.

புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்