பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்'
பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சோதனை
மயிலாடுதுறை நகரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது. இந்த பொருட்களை காந்திஜி சாலையில் உள்ள சில குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி ஆணையர் செல்வபாலாஜிக்கு புகார் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன், டேவிட் பாஸ்கர்ராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் காந்திஜி சாலை பகுதிகளில் உள்ள 4 குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
குடோனுக்கு 'சீல்'
அப்போது போலீஸ் நிலையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் 400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடுக்கும் விதமாக, தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.