பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்கு 'சீல்'

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-12-14 18:45 GMT

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டு, தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். துணை தாசில்தார் சதீஷ்நாயக் தலைமையில் வருவாய் அலுவலர் சகுந்தலா தேவி மற்றும் அலுவலர்கள் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். ஒரு கடையில் 15 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் மற்றொரு கடையில் இருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்